அதிவேக இணைய இணைப்பினை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தும் Orange

Read Time:54 Second

Orange நிறுவனம் 150Mbps LTE இணைய இணைப்பினை தரக்கூடிய உலகின் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

 

கூகுளின் அன்ரோயிட் 4.3 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

 

மேலும் 1.2 GHz Quad-Core Processor பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB என்பன தரப்பட்டுள்ளது.

 

இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous post மக்களோ கஷ்டத்தில்…..சொகுசாக வாழ்ந்த ஜனாதிபதி! புகைப்படங்கள் வெளியானது
Next post இன்னும் சில தினங்களில் அரிசி மற்றும் தேங்காய்களை கொடுத்து வாக்குகளை அபகரிக்க வருவார்கள்-வேட்பாளர் பாயிஸ்