அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசலை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம்..! - Sri Lanka Muslim

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசலை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம்..!

Contributors
author image

Editorial Team

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசலை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இருப்புகள் தற்போது தீர்ந்து போவதே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

அதன்படி, மருத்துவமனை, மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் டீசல் வழங்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கும் நிலை காணப்பட்ட போதிலும், பெரும்பாலானவர்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை. அதேசமயம் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், போதுமான அளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை மற்றுமொரு டீசல் இருப்பு நாட்டிற்கு வரும் எனவும், தற்போதுள்ள இருப்புகளை நிர்வகிக்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அத்தியாவசிய சேவைகளைத் தவிர சாதாரண விநியோகத்துக்கு கூட்டுத்தாபனம், டீசலை வழங்குவதில்லை என சிபெட்கோவுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பௌசர் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team