அநீதிக்கெதிராக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு - Sri Lanka Muslim

அநீதிக்கெதிராக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

Contributors
author image

Press Release

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அநீதிக்கெதிராக வாக்களித்த சகல மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

ஊழல், குடும்ப ஆட்சி, அநீதிகளிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சி செய்த தியாகத்தின் விளைவாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டார்.

 

படுகுழியை நோக்கிச் செல்லும் நாட்டைப்பாதுகாக்க ஆதரவு தாருங்கள் என்ற அவரது வேண்டுகோளையேற்று பல கட்சிகளும் அவருக்கு துணை நின்றன. இதனால் நாட்டு மக்களின் அமோக ஆதரவு அவருக்கு கிடைத்தது.

 

பல்வேறு சிரமங்களுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியிலும் மைத்திரியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த சகல மக்களுக்கும் எனது மனப்பூர்மான நன்றிகள் என்றும் உரித்தாகும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team