அபின் உள்ளிட்ட அபாயகர ஔடதங்கள் திருத்தச் சட்டம் இன்று முதல் நடைமுறை! - Sri Lanka Muslim

அபின் உள்ளிட்ட அபாயகர ஔடதங்கள் திருத்தச் சட்டம் இன்று முதல் நடைமுறை!

Contributors

பாராளுமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் இன்று (23) முதல் 2022ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

இதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

நீதி, சிறைச்சாலைகள் விவகார மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் செப்டெம்பர் 09ஆம் திகதி நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

குறித்த கட்டளைச் சட்டத்தின் ஊடாக நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் குறித்த சட்டம் திருத்தியமைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் திருத்தமானது, போதைப்பொருள்களை வைத்திருப்பது மற்றும் நாட்டுக்கு கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் வகையில், காலத்துக்கு ஏற்ற வகையில், சட்டத்தைப் புதுப்பித்து வலுப்படுத்தப்படவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team