அமெரிக்காவில் தொழும் ஒரு முஸ்லிமுக்கு மற்றவர்கள் கொடுக்கும் இடையூறுகளை பாருங்கள். - Sri Lanka Muslim

அமெரிக்காவில் தொழும் ஒரு முஸ்லிமுக்கு மற்றவர்கள் கொடுக்கும் இடையூறுகளை பாருங்கள்.

Contributors

-சுவனப்பிரியன்-

ஒரு மனிதன் தனது இறை கடமையை செய்வதற்கு எந்த அளவு எதிர்ப்பு வருகிறது என்பதை பாருங்கள். உலகிலேயே நாகரிகமானவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கர்கள் தொழும் ஒரு அடியானிடம் நடந்து கொள்ளும் முறை இதுதானா?

‘தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையோ, அல்லது இறையச்சத்தை ஏவுவதையோ அவன் பொய்யனெக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?

அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?’

-குர்ஆன் 96:9,10,11,12,13,14.

1400 ஆண்டுகளுக்கு முன்பு இறங்கிய இந்த வசனம் இன்று அமெரிக்காவில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு அருமையாக பொருந்துகிறது என்பதை எண்ணி வியந்து போகிறேன். இந்த முஸ்லிம் குடித்து விட்டு தரையில் உருளவில்லை. அல்லது எந்த பெண்ணிடமும் தவறாக நடக்கவில்லை. எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை.

vlcsnap-2013-12-21-22h11m12s72

தொழ வேண்டிய நேரம் வந்தவுடன் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஒரு ஓரமாக தனது இறைவனை பிரார்த்திப்பதுதான் இவர்களை இந்த அளவு எரிச்சல்படுத்துகிறது. இது போன்று கேலியும் கிண்டலும் அடிக்கும் கூட்டத்தைப் பார்த்து இறைவன் மேலும் கூறுகிறான்…..

‘தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்’
-குர்ஆன் 5:58

இத்தனை தூரம் காட்டு கத்தல்கள் வந்தாலும் அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் படாமல் தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் இவரின் நெஞ்சுரத்தை எண்ணி வியக்கிறோம்.

‘நம்பிக்கைக் கொண்டோர் வெற்றிப் பெற்று விட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணர்களைப் புறக்கணிப்பார்கள்’
-குர்ஆன் 23:1,2,3

ஆம்…அந்த முஸ்லிம் வெற்றி பெற்று விட்டார். பணிவுடன் தொழுகவும் செய்கிறார். கரடியாகக் கத்தும் அந்த வீணர்களைப் புறக்கணித்தும் விட்டார்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

 

Web Design by Srilanka Muslims Web Team