அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஹெல்மட். - Sri Lanka Muslim

அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஹெல்மட்.

Contributors

செல்லும் இடத்திற்கான வழிகளையும், வானிலை குறித்த தகவல்களையும் தரும் புதிய ரக ஹெல்மெட்(தலைக்கவசம்) அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலேயே இந்த உயர் தொழில்நுட்பம் கொண்ட ஹெல்மெட்டை ஸ்கல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகளையும், வானிலை அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக ஹெல்மெட்டின் வலது புறம் சிறிய அளவிலான காட்சிப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பின்புறம் வரும் வாகனங்களையும் பார்த்துக் கொள்ளலாம். இந்த ஹெல்மெட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வர்த்தக சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Web Design by Srilanka Muslims Web Team