அமெரிக்கா கரோலினா மாநிலத்தில் பீருக்கு பெயர்: சிவா போத்தலில்! நடராஜர் படம்! - Sri Lanka Muslim

அமெரிக்கா கரோலினா மாநிலத்தில் பீருக்கு பெயர்: சிவா போத்தலில்! நடராஜர் படம்!

Contributors

அமெரிக்கா, வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள அஷெவில்லா நகரில் மது பானம் தயாரிக்கும் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனைக்கு விடுத்துள்ள பீர் பாட்டிலில் நடராஜர் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த பீருக்கு சிவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க வாழ் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள பிரபஞ்ச இந்து சமுதாயம் என்ற அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் கூறுகையில், இந்து கடவுளர்களின் படங்களையோ பெயரையோ வர்த்தக ரீதியாகவோ வேறு எதற்குமோ பயன்படுத்தப்படுவது முறையானதல்ல் அவ்வாறு பயன்படுத்துவது இந்துக்களின் மனதைக் காயப்படுத்துவதாகும். கோயில்களிலும் வீடுகளிலும் வணங்கப்படும் சிவனை, பீர் பாட்டிலில் பொறித்து வியாபாரமாக்குவது கூடாது என்று தெரிவித்துள்ளார்.

சிவா பீரைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், சிவன் படம் பொறித்த டி சர்ட்டுகளையும் தயாரித்து வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team