அமெரிக்க வரலாற்றில் இன்னுமொரு முஸ்லிம் நகராதிபதி! - Sri Lanka Muslim

அமெரிக்க வரலாற்றில் இன்னுமொரு முஸ்லிம் நகராதிபதி!

Contributors

அமெரிக்காவின் New England மாநிலத்தின் தென் வின்ட்சர், கனக்டிகட் (Connecticut) நகரத்தின் முதலாவது முஸ்லிம் நகராதிபதியாக வைத்தியர் எம். சவுத் அன்வர் தெரிவாகியுள்ளார். கனக்டிகட்டில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றில் இதுவொரு மைற்கல்லாகும்.

“வாழ்த்துக்கள், அல்லாஹ் உங்களுக்குத் துணை புரிவானாக. சமூகப் பணிகளில் அதிகமான முஸ்லிம்கள் நமக்குத் தேவை” என ஓர் அபிமானி அன்வரின் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.

பாகிஸ்தான், கராச்சி வம்சாவளிப் பிரஜையான வைத்தியர் அன்வர், 1991 இல் அமெரிக்கவுக்கு வந்தார். தனது பாட்டியுடன் வாழ்ந்த அவர் யேல் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத் துறையில் முதுமானி பட்டத்தைப் பெற்றார்.

தனது சமூகப் பார்வையை விவரிக்கும் போது, “ஒரு நகரை பிரம்மாண்டமான நோயாளியாகப் பார்த்தால், பொது சேவைகள் உறுப்பைக் காணலாம், பொலிசும் பாதுகாப்பு உறுப்பு, நிதி பொருளாதார உறுப்பு …. ஆரோக்கியமான நகரையும் சுகாதாரமான மனிதனையும் உருவாக்க வேண்டுமென்றால் இந்த எல்லா உறுப்புக்களும் ஒன்றோடொன்று இனைந்து வேலை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

அமெரிக்கா வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் நகராதிபதிகளின் பட்டியலில் இணையும் வைத்தியர் அன்வரின் பதவியேற்பு, அமெரிக்க ஊடகங்களினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது.
தகவல்: onis.nt

Web Design by Srilanka Muslims Web Team