அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு! - Sri Lanka Muslim

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு!

Contributors

அமைச்சரவையில் கடமையாற்றும் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பயணத்தின் கடமைகளுக்கு அத்தியாவசியமான அதிகாரி அல்லது ஒரு சிலரைக் கொண்ட குழு மாத்திரமே இவ்வாறான பயணங்களில் பங்கேற்க வேண்டுமென அமைச்சரவை சமர்ப்பித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில்  ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team