அமைச்சர்கள் மீது சபாநாயகர் விமர்சனம் - நாள் தோறும் ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வரவேண்டியிருக்கும் எனவும் தெரிவிப்பு..! - Sri Lanka Muslim

அமைச்சர்கள் மீது சபாநாயகர் விமர்சனம் – நாள் தோறும் ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வரவேண்டியிருக்கும் எனவும் தெரிவிப்பு..!

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வரும்போது மாத்திரமே முன்னிலை அமைச்சர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்

 

அப்படியெனில் நாள் தோறும் ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வரவேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு கொள்கலன் வெடிப்புக்கள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னிலை அமைச்சர்கள் எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதனையடுத்தே சபாநாயகர் இந்த கருத்தை வெளியிட்டார்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு பதில் கூறவேண்டிய பொறுப்பு முன்னிலை அமைச்சர்களுக்கு உள்ளது. இதில் இருந்து விலகியிருக்கமுடியாது.  இது கவலைக்குாிய விடயமாகும்.

எனவே முன்னிலை அமைச்சர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளித்து பொறுப்புக்கூறலை நிறைவேற்றவேண்டும் என்று சபாநாயகர், அரசாங்க கட்சி பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team