அமைச்சர் றிசாத்தை தமிழ் இனத்தை அழிக்கும் நபராக சில தமிழ் இணையங்கள் செய்தி வெளியிடுகின்றன - மாகாண சபை உறுப்பினர் ஜனுாபர் - Sri Lanka Muslim

அமைச்சர் றிசாத்தை தமிழ் இனத்தை அழிக்கும் நபராக சில தமிழ் இணையங்கள் செய்தி வெளியிடுகின்றன – மாகாண சபை உறுப்பினர் ஜனுாபர்

Contributors

-அபூ அஸ்ஜத்-

வடக்கில் மட்டும் அல்ல  இலங்கை தேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் ஒரு அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் செயற்படுவதாகவும்,அவர் மக்களுக்கு ஆற்றும் பணிகளை பொருத்துக் கொள்ள முடியாத பிரிவினை வாத

சக்திகளின் பின்னால் இருக்கும் தமிழ் இணையம் ஒன்று தொடர்ந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை ஒரு முஸ்லிம் என்பதால் அனவாத ரீதியாக தாக்கும் செயலை முன்னெடுப்பதை வண்மையாக கண்டிப்பதாக வட மாகாண சபைக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் முஹம்மத் ஜனுாபர் தெரிவித்துள்ளார்.

இன்று முல்லைத்தீவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.வடமாகாண சபையில் எதிர்கட்சியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள்,மாகாண சபை நிர்வாகத்துக்கான ஒத்தழைப்புக்கள் தொடர்பில் அவர் இதன் போது விளக்கமளிததுள்ளார்.

மேலும் அவர் கருத்துரைக்கையில் –

வடக்கில் அதிகமான பாதிப்புக்களை யுத்தத்தால் தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளதாகவும், அதே போல் முஸ்லிம்களும் இவ்வாறான இழப்புக்களை சந்தித்துள்ளதை சில தமிழ் அரசியல்வாதிகள் மூடி மறைக்க முயல்கின்றனர். யுத்த பாதிப்பு முல்லைத்தீவு மக்களை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.இங்கு தமிழர்களும், முஸ்லிம்களும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்துவருகின்றனர்.வெளியேற்றத்திற்கு முன்னரும், மீள்குடியேற்றம் நடை பெறுகின்ற போதும் தமிழர்களும்,முஸ்லிம்களும் மிகவும் நெருக்கமாக பழகிவருகின்றனர்.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று எவரும் கூறுவார்கள் என்றால் அதற்கெதிராக முதலாவது பேசுவது நானாகத்தான் இருக்கும்.ஏனெனில் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னணியில் இருக்கும் சில அரசியல் சக்திகளுடன்,பதவியில் உள்ளவர்களும் இருக்கின்றார்கள்.அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.

குறிப்பாக வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சமாதானத்தின் பின்னரான காலப்பபகுதியில் மத்திய அரசாங்கத்தினதும்,மாகாண சபையினுடையதும் பணிகள் பாராட்டுக்குரியது.வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,வடமாகாண ஆளுநர் சந்திர சிறி ,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,ஆகியோரின் நேரடி பார்வை செலுத்தப்பட்டு இங்கு  தேவையான அடிப்படை வசதிகள்,அரச நியமனங்கள்,உள்ளிட்ட பாடசாலைகள், வீதிகள்,மின்சாரத் திட்டங்கள்,விவசாய நீர்ப்பாசன புனரமைப்புக்கள் என்று இங்கு அவர்களினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் மறந்து பேச முடியாது.

இவ்வாறான நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது அபாண்டத்தையும்,உண்மைக்கு புறம்பான இட்டுக்கட்டப்பட்ட பிழையான தகவல்களை இனவாத சிந்தணையினை மட்டும் கொண்டு செயற்படும் சில இணையத்தளங்களில் தினக்கதிர் இணையத்தின் ஆசிரியர் தான்தோன்றித்தளமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு அவரை தமிழ்  இனத்தை அழிக்கும் நபராக காட்டி செய்திகளை வெளியிடுவதை வண்மையாக கண்டிக்கின்றேன்.

இறுதி யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து பாதுகாப்பு தேடி அரசாங்கத்திடம் வந்த முல்லிவாய்க்கால் மக்களை ஒமந்தையில் வைத்து அவர்களுக்கு முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு சவூதி அரசாங்கம் வழங்கியிருந்த பேரீத்தம் பழங்களை கொண்டுவந்து அவற்றை தன் கரங்களால் அம்மக்களுக்கு பகிர்ந்தளித்து அம்மக்களது அழிவினை பாதுகாத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை முல்லை மாவட்ட தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அன்று மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில் குறுகிய காலத்துக்குள் மீள்குடியேற்றம் செய்ததை சர்வதேசம் பாராட்டியிருக்கின்ற போது,இனவாதமே வாழ்க்கையாக கொண்டிருக்கும் மேற்படி இணையத்தளம் ,யாழ் நுாலகர் நியமனம் தொடர்பில் அமைச்சரை சம்பந்தப்படுத்தி ஒரு முஸ்லிம் பெயரைக் கொண்டவர் வடமாகாணத்தில் ஒரு பதவிக்கோ,அல்லது சிற்றுாழியராகவோ உரிய தராதரங்களுடன் நியமனமாகும் போது,அதற்கு எதிராக வடக்கில் முஸ்லிம் வாழக் கூடாது,நியமனங்கள் பெறக் கூடாது என்று அரைவேற்காட்டுத்தனமான ஆதரங்கள் அற்ற செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்களை முஸ்லிம்களின் நிரந்த எதிரியாக காண்பிக்கும் இந்த இணையத்தளத்தின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

பிழையான நியமனம் அங்கு வழங்கப்பட்டுள்ளது என்றால் அது தொ்டர்பில் கவனத்தை செலுத்துவதற்கு உரிய ஆதாரங்களை வழங்குவதைவிடுத்து பொறுப்பற்ற விதத்தில் அறிக்கைகளை விடுவதை இந்த இணையத்தளம் கைவிடுவதன் மூலம்,தமிழ்-முஸ்லிம் இன உறவை கட்டியெழுப்ப முடியும் என்ற எனது ஆலேசனைகைளை முன் வைக்கவிரும்பகின்றேன்.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது தம்பி…என்ற பாடல் வரிகளையாவது குறைந்தளவில் கவனத்திற் கொண்டு இனவாத இணையங்களின் ஆசிரியர்கள் தமது மனசாட்சிக்கு பயந்து தமது பணிகளை ஆற்றுவது ஊடக வழிமுறையென்றும் அங்கு வடமாகாண சபை உறுப்பினர் ஜனுாபர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team