அமைச்சர் வீட்டுக்கு பால் வாங்கிக் கொடுப்பதற்கு தனி ஊழியர்! - 3 மணிநேர வேலைக்கு 15 ஆயிரம் ரூபா சம்பளம். - Sri Lanka Muslim

அமைச்சர் வீட்டுக்கு பால் வாங்கிக் கொடுப்பதற்கு தனி ஊழியர்! – 3 மணிநேர வேலைக்கு 15 ஆயிரம் ரூபா சம்பளம்.

Contributors

மகாராஷ்டிராவில், அமைச்சர் வீட்டுக்கு பால் வாங்கிக் கொடுப்பதற்காக மட்டும், மாதம், 15 ஆயிரம் சம்பளத்தில் அரசு ஊழியர் ஒருவர் வேலைக்கு வைக்கப்பட்டுள்ளார். தினமும், காலையில், மூன்று மணி நேரம் மட்டுமே அந்த ஊழியருக்கு வேலை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்வி ராஜ் சவான் தலைமையிலான அமைச்சரவையில், கால்நடைத் துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருப்பவர், மதுகர் தியோராவ் சவான். இவர் வீடு, மந்திராலயா பகுதியில் உள்ளது.

கணேசன் என்ற கால்நடைத்துறை ஊழியருக்கு, அமைச்சர் வீட்டுக்கு பால் வாங்கிக் கொடுப்பது மட்டும் தான் வேலை. தினமும், காலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வரும் அவர், வோர்லி ஆரே என்ற இடத்தில் உள்ள, அரசின் பால் பண்ணைக்குச் சென்று, அமைச்சர் வீட்டுக்கு, 5 லிட்டர் பால் வாங்கி, பஸ் பிடித்து, அமைச்சர் வீட்டில், கொடுத்து விட்டு, 8:00 மணிக்கு, வீடு திரும்பி விடுவார். இதற்காக, அவருக்கு, மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

இதை, ஒரு பத்திரிகையின் நிருபர், கண்காணித்து, படங்களுடன் செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு முன், கால்நடைத்துறை அமைச்சராக இருந்த குலாப்ராவ் தியோகார் என்பவர், தன் வீட்டுக்கு, தினமும், 5 லிட்டர் பால், 15 லிட்டர் லஸ்சி, 15 போத்தல் இனிப்புச்சுவை கொண்ட பால் போன்றவற்றை, இலவசமாக வாங்கி வந்துள்ளார். அந்த விவகாரம், பத்திரிகைகளில் வெளியானதும், அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team