அமைச்சுப்பதவியிலிருந்து அலி சப்ரியை தூக்கி எறியுங்கள் - ஞானசாரதேரர் ஆவேசம்..! - Sri Lanka Muslim

அமைச்சுப்பதவியிலிருந்து அலி சப்ரியை தூக்கி எறியுங்கள் – ஞானசாரதேரர் ஆவேசம்..!

Contributors
author image

Editorial Team

நீதி அமைச்சர் அலி சப்ரியை(Ali Sabri) அந்தப் பதவியிலிருந்து தூக்கி எறியுமாறு ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரதேரர்(Galagoda  Gnanasara Thera) தெரிவித்துள்ளார்.

அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்தரதாரி சஹரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி உருவாக்கத்தின் போதும், அதில் என்னை தலைவராக நியமித்துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால் இவற்றை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team