அம்பாறையில் சில கோவில்களில் பியசேனவின் புகைப்படம்? - Sri Lanka Muslim

அம்பாறையில் சில கோவில்களில் பியசேனவின் புகைப்படம்?

Contributors

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, அரசு பக்கம் தாவி இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தின் பொடியப்பு பியசேன எம்.பி இவரிடம் இருந்து உதவிகள் பெறுகின்ற ஆலயங்களிடம் நிபந்தனை ஒன்றை கண்டிப்பாக முன்வைத்து வருகின்றார்.

இவ்வாலயங்களில் இவரின் புகைப்படத்தை தொங்க விட வேண்டும் என்பதே இந்நிபந்தனை. இந்நிபந்தனைகளுக்கு இணங்குகின்ற ஆலயங்களுக்கே உதவி செய்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது

பல ஆலயங்களில் மூலஸ்தான மண்டபத்தில் இவரின் புகைப்படம் தொங்க விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கல்முனையை அண்டிய ஆலயத்துக்கு பெற்றோருடன் சென்று இருந்த சின்ன சிறுமி ஒருத்தி இவரது புகைப்படத்தையும் கடவுளின் திருவுருவப் படம் என்று நினைத்து தொட்டுக் கும்பிட்டு உள்ளார். (j.nw)

 

Web Design by Srilanka Muslims Web Team