அம்பாறை மாவட்டத்தில் நாளை மின்வெட்டு! - Sri Lanka Muslim
Contributors

அம்பாறை மற்றும் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் நாளை 24ஆம் திகதி 9 மணிநேர மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

 
அம்பாறை கிரிட் உப மின் நிலையத்தின்; அவசர திருத்தவேலை காரணமாக நாளை சனிக்கிழமை (24) காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை ஒன்பது மணிநேர மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

 
அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர பிரிவுக்குட்பட்ட அம்பாறை, இறக்காமம், வரிப்பத்தன் சேனை, தீகவாபி, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, பொத்துவில், பாணம, உல்லை, கோமாரி, .இங்கினியாகலை, ஹிங்குரான, உகன, லகுகல, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பனங்காடு, ஆலங்குளம், புதுக்குடியிருப்பு, மத்தியமுகாம், வீரகொட, சடயந்தலாவ, மஜீத்புரம், புத்தங்கல, சவளக்கடை, குமாரிகம, 5ஆம், 11ஆம், 13ஆம், 17ஆம், 21ஆம் கொலனிகள் மற்றும் ரஜகம ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுலில் இருக்குமெனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, காரைதீவு, பாண்டிருப்பு, கிட்டங்கி, அன்னமலை, நாவிதன்வெளி, துறைநீலாவணை, துறைவண்டியமடு, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரியநீலாவணை, மாளிகைக்காடு, சொறிக்கல்முனை, சம்மாந்துறை. வீரமுனை, மாவடிப்பள்ளி, நிந்தவூர், ஒலுவில், அட்டப்பள்ளம், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் அஸ்ரப் நகர் ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team