அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 2 நாள் விஷேட பயிற்சி நெறி..! - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 2 நாள் விஷேட பயிற்சி நெறி..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம்

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 2 நாள் விஷேட பயிற்சி நெறி கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் 2022.01.10 மற்றும் 11ம் திகதிகளில் நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் கப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லதீப், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனிபா, வளவாளர்களாக சிரேஷ்ட உள வளத்துணை ஆலோசகர்களான எஸ். ஸ்ரீதரன், கே. புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி நெறியானது “பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்” என்னும் மகுடத்தின் கீழ் இடம்பெற்றது. இப் பயிற்சி நெறியின் போது இன நல்லுறவு தொடர்பான பல்வேறான குழு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவை இடம்பெற்றதுடன் இந்த பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Web Design by Srilanka Muslims Web Team