அம்பாறை மாவட்ட முப்பெரு விழா! - Sri Lanka Muslim
Contributors

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் முப்பெரு விழாவிற்கான ஏற்பாட்டுக் குழுக் கூட்டம் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

பேரவையின் தலைவர் தேசபந்து ஜலீல் ஜீ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பேரவையின் பொதுச் செயலாளர் வி.ரி. சகாதேவராஜா பிரதான உரை நிகழ்த்தினார்.

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் நிறைவேற்று சபை உயர்பீட நிர்வாகிகளின் தீர்மானத்திற்கிணங்க ‘அட்சயம்’ கவிதைத் தொகுதி வெளியீடு, சிரேஷ்ட கவிஞர்களின் கவிதை வாசித்தல், பாராட்டுப் பத்திரம் வழங்கல், அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் ஆளுமைகளுக்கு ‘மங்கையர் திலகம் விருதுகள்’ வழங்கிக் கௌரவித்தல் ஆகிய முப்பெரு விழாவை எதிர்வரும் ஜுன் மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல மேடை நிகழ்ச்சிகள் உள்ளடங்கலாக காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேரவையின் நிறைவேற்று உயர்பீட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இணைப்பாளர்கள் அடங்கலாக நிதியீட்டக் குழு, வெளியீட்டுக் குழு, ஊடகப் பிரசாரக் குழு, சேமநலன்புரிக் குழு மற்றும் கலை கலாசாரக் குழு என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுப் புகைப்படங்கள் மற்றும் பேரவையின் நிறைவேற்று உயர்சபையின் உறுப்பினர்கள் அடங்கலான புகைப்படங்களும் எடுக்கப்பட்டு, பொறுப்புக்கள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் முப்பெரும் விழாவுக்குரிய ஒத்திகைகளும் பார்க்கப்பட்டன.

பேரவையின் செயலாளர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா, பொருளாளர் செஸிலியா மற்றும் கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டு ஆலோசனைகளும், ஒத்துழைப்புக்களையும் வழங்கினார்கள்.

அங்கு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ‘அட்சயம்’ கவிதைத் தொகுதி நூல்வெளியீடு, ‘மங்கையர் திலகம்’ விருது வழங்கல் மற்றும் சிறப்பு கவிதைகள் உரைத்தல் தொடர்பாகவும் ஏற்பாட்டு ஒத்திகை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற ன.

பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team