அம்பாறை மாவட்ட வர்த்தகர்கள் பொறுப்புடன் செயற்படவும்! - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்ட வர்த்தகர்கள் பொறுப்புடன் செயற்படவும்!

Contributors

தற்போதையை இக்கட்டான கால கட்டத்தில், அம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டுமென, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன், இன்று (12) தெரிவித்தார்.

சில பிரதேசங்களில் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

திடீர் சுற்றிவளைப்பின் போது அசாதாரண சுழல் நிலையைப் பயன்படுத்தி, சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து அத்தியவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பொருட்களை தன்வசம் வைத்துக் கொண்டு நுகர்வோரை திருப்பி அனுப்புதல் போன்றவை கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்படுமெனவும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team