அம்பாறை மாவட்ட வலுவிழப்புடனான நபர்களுக்கான சர்வதேச தின விழா பிரதம நிகழ்வு மருதமுனையில் !! - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்ட வலுவிழப்புடனான நபர்களுக்கான சர்வதேச தின விழா பிரதம நிகழ்வு மருதமுனையில் !!

Contributors

(நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.சினாஸ், றாஸிக் நபாயிஸ்)

“உலக கோவிட் 19க்கு பின்னரான காலப்பகுதியில் உட்படுத்தல், அணுகுவசதி, நிலைபெறு ஆகியவற்றை முன்னோக்கிய வலுவிழப்புடனான நபர்களின் தலைமைத்துவமும் பங்குபற்றலும்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகம் மருதமுனை ஹியூமன் லிங்க் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய வலுவிழப்புடனான நபர்களுக்கான சர்வதேச தின விழா நிகழ்வு அம்பாறை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம்.பி. சம்சுதீனின் தலைமையில் மருதமுனை கலாச்சர மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் கலந்து கொண்டார். கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் என். வதிவண்ணன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள தலைமை சிரேஷ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம். அலியார், மருதமுனை ஹியூமன் லிங்க் அமைப்பின் பணிப்பாளர் ஏ. கமறுதீன், ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம். மீராமுகைதீன், ஓய்வுபெற்ற மாவட்ட காணிப்பதிவாளர் ஜே. எம். ஜமால் முகம்மட் உட்பட பிரமுகர்கள், விசேட தேவையுடைய மாணவர்களின் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

விசேட தேவையுடைய மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும், விசேட திறமைகளும் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team