அரசாங்கத்தின் இரகசிய திட்டத்தில் கந்தானையில் 5 சூதாட்ட நிலையங்கள்? - Sri Lanka Muslim

அரசாங்கத்தின் இரகசிய திட்டத்தில் கந்தானையில் 5 சூதாட்ட நிலையங்கள்?

Contributors

கந்தானை பகுதியில் ஐந்து பெரிய சூதாட்ட நிலையங்களை அமைக்க அரசாங்கம் இரகசியமாக திட்டமிட்டுள்ளது என்ற தகவல் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அம்பலமாகியது.வரவு – செலவு திட்டத்தை ஆரம்பித்து பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,மேற்படி இரகசிய திட்டத்திற்கு முதலீட்டு சபையின் அங்கீகாரமும் வழங்கப்பட்டதென கூறினார்.

தனது உரையின்போது விக்ரமசிங்க இந்த சூதாட்ட திட்டம் தொடர்பான இரகசிய தகவல் ஆவணமொன்றையும் சபையில் காட்டினார்.

இந்த ஆவணத்தின்படி இத்திட்டம் மூலோபாய அபிவிருத்தித் திட்டமென வகைப்படுத்தப்பட்டுள்ளது. 5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு வரிச்சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் அரசாங்கம் தனக்கு விருப்பமான ஆட்களுக்கு சூதாட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருகின்றது.

சிங்கப்பூரில் அனுமதிப் பத்திரங்களை ஏலத்தில் விற்பதனால் அரசாங்கம் பெரும் வருமானத்தை பெறுகின்றது. அங்கு ஓர் அனுமதிப் பத்திரத்தின் குறைந்த பட்ச விலை 100 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

இதே முறையை அரசாங்கம் பின்பற்றினால் குறைந்த பட்சம் இலங்கைக்கு வருமானமாவது கிடைக்கும். ஆனால் கந்தானை சூதாட்ட திட்டத்தின் மூலம் வருமானம் கிடைக்கப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க கூறினார்.(tti)

Web Design by Srilanka Muslims Web Team