அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற எதிர்க்கட்சி முயற்சி! - Sri Lanka Muslim

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற எதிர்க்கட்சி முயற்சி!

Contributors

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவை கோருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார, நிதி நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்கள் குறித்து தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை குறித்து பொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற குழுவிற்கு விளக்கமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளுடன், எதிர்க்கட்சிகள் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team