'அரச இரகசிய சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த முடியாது' - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு! - Sri Lanka Muslim

‘அரச இரகசிய சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த முடியாது’ – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

Contributors

அரச இரகசியச் சட்டத்தின் கீழ், உயர் பாதுகாப்பு வலயங்களை நியமித்ததாக வெளியிடப்பட்ட கருத்து அடிப்படையற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது, இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் செயலாகும் என HRCSL விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச இரகசிய சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team