அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு - இடைக்கால உத்தரவு நீடிப்பு! - Sri Lanka Muslim

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு – இடைக்கால உத்தரவு நீடிப்பு!

Contributors

அரச துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில், வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் உள்ளடக்கப்படுவதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

அதன்படி, 2023 மார்ச் 29, வரை இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

176 விசேட வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

பின்னர், மனு மீதான விசாரணை மார்ச் 24, 28, 29 ஆகிய திகதிகளில் ஒத்திவைக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team