அரபுக் கல்லூரி தீக்கிரை; மூவர் கைது - Sri Lanka Muslim
Contributors

மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் அரபுக் கல்லூரியை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்களை    கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மூன்று  மாதங்களுக்கு முன்னர் ஓட்டுமாவடி பிரதான வீதியில் அமைந்திருந்திருந்த அரபுக் கல்லூரியை இனம் தெரியாதேர் தீயிட்டு தீக்கிரையான சம்பவம் இடம்பெற்றது. இதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொணடு வந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பாடசாலை வீதி செம்மன் ஒடையைச் சேர்ந்த 18 வயதுடையவர், பாடசாலை வீதி மீராவோடையைச் சேர்ந்த 17 வயதுடையவர் மற்றும் சேர்மன வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஒருவர் உட்பட மூன்று பேரை இன்று வெள்ளிக்கிழமை காலையில் அவரவர் வீடுகளில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

அரபுக் கல்லூரி தீக்கிரையான சம்பவத்தில் மௌலவி ஒருவர் உட்பட இருவரின் தலைமையில் தீக்கிரையாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் கைது வெசய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.tm

Web Design by Srilanka Muslims Web Team