அலவி மௌலானா மக்காவில் காணமல் போனமைக்கு காரணம் பௌசி! - Sri Lanka Muslim

அலவி மௌலானா மக்காவில் காணமல் போனமைக்கு காரணம் பௌசி!

Contributors

அஸ்ரப் ஏ சமத்: மக்காவில் தங்கியிருந்த அலவி மௌலானா  2 மணித்தியாலயங்கள் காணமல் போகி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமொன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.  இச் சம்பவத்தின் முழுப்பொறுப்பையும் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஏற்கவேண்டும். என அப்துல் காதர் மசூர் மௌலானாவும், பிரதியமைச்சர் அப்துல் காதரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி கடந்த திங்கற் கிழமை “ரிவிர” என்ற சிங்கள பத்திரிகை மக்காவில் அலவி மௌலான கமாணமல் போகிவிட்டதாகவும் அவரைத்  தேடுவதாகவும்  தலைப்புச் செய்தி வெளியீட்டிருந்தமை இங்கு குறிபிடத்தக்கது.

இவ் விடயம் பற்றி ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மௌலான கூறுகையில்  அலவிமௌலான ஹஜ் கமிட்டியின்  உறுப்பினர், அவர் ஒரு வி.ஜ.பி.  அவர் மக்காவுக்கு இந்த நாட்டிலிருந்து  செல்லும்  ஹாஜிகளின்  அலுவல்களில் ஈடுபடுவதற்காக தொடர்ந்து மக்காவுக்குச் செல்வது வழக்கம்.

அவர் இம்முறை மக்கா செல்லு முன் அவரது பிரத்தியோகச்  செயலாளர் நக்கீப் மொளலானா அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எழுத்து மூலம் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதில்  ஆளுனருக்கு  82வயது என்பதால் அவருக்கு ஒரு உதவியாளர் தேவை அதற்காக விசா ஒன்றை வழங்குமாறு கோரியிருந்தார்.  அதனை அமைச்சர் பௌசி வழங்க மறுத்துள்ளார்.

ஆனால் சவுதி அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் ஹஜ் சேவையாளா; அல்லது Free movement visa        இதனை அறபியில்  (பேஹ்தா விசா ) 150 வை வழங்கியுள்ளது.  இச் விசாகக்ள் அமைச்சர் பௌசிக்கு வழங்கப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம். இந்த விசாவுக்கு என்ன நடந்தது. இந்த விசாக்களும் விற்கப்பட்டுள்ளது. சில முகவர்கள் இந்த விசாவில் ஹாஜிகளைச் கொண்டு சென்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்காவில் ஹோட்டலில் தங்கியிருந்த ஆளுநர  தனது பிள்ளைகளுக்காக ஏதும் வாங்க வேண்டும் என தணியாக மக்காவில் இருந்து பாதைகள் ஊடகச் சென்று பாதை தெரியாமல் அங்கும் இங்கும் தடுமாறியுள்ளார். இலங்கையில் கூட அவருக்கு நிரந்தர உதவியாளர்கள் பாதுகாப்பாளர்கள் உள்ளனர்.

அவரது கையைப் பிடித்துக்கொண்டுதான் அவர்கள் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு ஒர் உதவியளார் விசாவை கட்டாயம் அமைச்சர் பௌசி  வழங்கியிருக்க வேண்டும் எனவும் மசூர் மொலானா தெரிவித்தார். இவ் விடயம் சம்பந்தமாக பிரதியமைச்சர் அப்துல் காதர் தெரிவிக்கையில் நானும் ஹஜ் கமிட்டியில் ஒரு உறுப்பினர் இந்த விசாக்கள் பற்றி நான் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team