அலி சப்ரி தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக பேச்சு! - Sri Lanka Muslim

அலி சப்ரி தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக பேச்சு!

Contributors

நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலிசப்ரி தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த ஸ்ரீவர்த்தன, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நிதி அமைச்சர் தலைமையிலான இந்த குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று ஆரம்பித்த பேச்சுவார்த்தை சாதகமான முறையில் இடம்பெற்றிருப்பதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வொஷிங்டனில் அமைந்துள்ள நாணய நிதியத்தின் தலைமையகத்தில், இந்த பேச்சுவார்த்தை நிதியத்தின் சர்வதேச விடயங்களுக்கான முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva கிடையில் ஆரம்பமானது.

இலங்கையில் நிதி நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிதி அமைச்சர் இதன்போது விபரித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு சாதகமான பதிலை அளித்துள்ளதுடன் இலங்கை முன்னெடுத்துள்ள பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவும் முன்வந்துள்ளது.

நிதி நிலைமையை கையாள்வதற்கான பொறிமுறையுடன் நாணய சபையுடன் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் நிதி அமைச்சர் விபரித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்பில் இலங்கைக்கு சாதகமாக நிலைப்பாட்டை நாணய சபை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையிலான இந்திய பொருளாதார தூதுக்குழுவை நிதி அமைச்சர் அலிசப்ரி சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் சந்தித்துள்ளார். இந்த தந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை மேற்கொண்டுவரும் அனைத்து அபிவிருவித்தி நடவடிக்கைகளுக்கும் இந்தியா முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் இரு நாடுகளும் முன்னோக்கி செயற்படுவதற்கு உடன்பட்டிருப்பதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

இலங்கை நாணய நிதியத்துடன் முன்வைக்கும் விடங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதி செய்துள்ளது. விசேடமாக நிதியத்தின் முயற்சிக்கு இந்தியா பெரும் ஒத்துழைப்பை வழங்கும்.

Web Design by Srilanka Muslims Web Team