அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், அவனது பண்புகள் பற்றிய நூல் சிங்கள மொழியிலும் » Sri Lanka Muslim

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், அவனது பண்புகள் பற்றிய நூல் சிங்கள மொழியிலும்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம்- பாலாவி


ஏகத்துவத்தின் அடிப்படைகளில் அதிமுக்கியம் வாய்ந்த பகுதியே இறைவனது அழகிய திருநாமங்களும் அவனது உயர்ந்த பண்புகளுமாகும்.

உலகில் இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய வழிகெட்ட இயக்கங்களையும், பிரிவுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் இவ்வழகிய திருநாமங்களுக்கும் பண்புகளுக்கும் பாரிய பங்களிப்பு உண்டு என்றால் மிகையாகாது. அல்லாஹ்வை ஏற்ற முஸ்லிம்கள் ஓரளவேனும் அவனைப் பற்றிய தன்மைகள் மற்றும் அழகிய பெயர்களைத் தெரிந்து அறிந்து கொள்வது கட்டாயமாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

இறைவனை விளங்குவதில் மூன்றில் ஒரு பகுதியான அழகிய திருநாமங்கள் மற்றும் அவனது உயர்ந்த பண்புகளை தமிழ் உலகிற்கு ஒழுங்கமைந்த முறையில் ஓர் நூலை எழுதி தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு தெளிவையும் விளக்கத்தையும் வழங்கிய பெருமை மதிப்புக்குரிய அஷ் ஷைக் ரிஸ்வான் ஜுனைத் மதனி அவர்களையே சாரும். இவர் தமது இளமாணி பட்டப்படிப்பை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான பீடத்தில் சிறப்பாக பூர்த்தி செய்து பின்னர் தமது முதுமாணி பட்டப்படிப்பை இலங்கை- பேராதனை பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் தமிழில் எழுதிய இப்புத்தகம் தென்னிந்தியாவில் புத்தக வெளியீட்டில் கால்பதித்த ஸாஜித புக் ஹவுஸும் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றது, இவ்வாறு தமிழ் முஸ்லிம் உலகிற்கு எழுதப்பட இப்புத்தகத்தை சிங்கள மொழி பேசும் மக்களுக்கும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் இறைவன் பற்றிய ஆழமான தெளிவை கொடுக்க வேண்டும் எனும் நந்நோக்கில் பாரியதொரு முயற்சியின் வெளிப்பாடாக இந்நூல் சிங்கள மொழியிலும் அச்சிடப்பட்டு வெளிவரவிருக்கின்றது என்பதை சந்தோசத்துடன் அறியத்தருகிறோம்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இப்புத்தகத்தை பெற விரும்புவோர் உரிய தொகைப் பணத்தை செலுத்தி குறிப்பாக இலங்கையில் ஷைக் ரிஸ்வான் மதனி அவர்களிடமும் அவரது புத்தக முகவர்களிடமும், இந்தியாவில் தமிழ் மொழியில் ஸாஜிதா புக் ஹவுஸிலும் பெற்றுக் கொள்ளலாம். பல சிரமங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பால் இத்தகைய ஓர் சிறந்த புத்தகத்தை மக்களுக்காக நூலுருவில் வழங்கிய ஷைக் ரிஸ்வான் மதனி அவர்களது பணியை வல்லவன் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு உயர்ந்த கூலிகளையும் வழங்கியருள்வானாக! ஆமீன்
جزاه الله خيرا وبارك في جهوده المشكورة ونفع به الأمة .

Web Design by The Design Lanka