அல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2010 ம் ஆண்டு அணி சம்பியனானது - Sri Lanka Muslim

அல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2010 ம் ஆண்டு அணி சம்பியனானது

Contributors
author image

சுலைமான் றாபி

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் வருடா வருடம் கொண்டாடப்படும் பழைய மாணவர்களை ஒன்றுசேர்க்கும் நிகழ்வின் ஒரு அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று முன்தினம் (15) நிறைவு பெற்றது.

சுமார் 3.1 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள இப்பாடசாலையின் முன்முகப்புத் தோற்றத்தினை புனரமைப்பு செய்வதற்காக நிதி திரட்டும் முகமாகவே இவ்வருடம் இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

அந்த வகையில் கடந்த 19 வருட அணிகள் பங்குபற்றிய இத்தொடரில் 2004 ம் ஆண்டுப்பிரிவு மற்றும் 2010 ம் ஆண்டுப்பிரிவு அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்ததோடு 2010 ம் ஆண்டுப்பிரிவு அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

ஆரம்பமாக துடுப்பெடுத்தாடிய 2004 ம் ஆண்டு அணி 05 ஓவர்கள் நிறைவடைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இர்ஷாத் 15 ஓட்டங்களையும், ஸியாத் 07 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு, பந்து வீச்சில் 2010 ம் ஆண்டுப்பிரிவு அணி சார்பாக பர்ஹான், அத்ஹர், றுஸைத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

48 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2010 ம் ஆண்டுப்பிரிவு அணி 04 வது பந்துவீச்சு ஓவர் நிறைவடைவில் எவ்வித விக்கட்டுக்களையும் இழக்காமல் வெற்றிபெற்றது. இதில் அவ்வணி சார்பாக ஆட்டமிழக்காமல் ஹக்கீம் 31 ஓட்டங்களையும்,அத்ஹர் 16 ஓட்டங்களையும் பெற்று தங்களது அணியின் வெற்றிக்கு துணைபுரிந்தனர்.

இச்சுத் தொடரில் 43 ஓட்டங்களைப் பெற்று 04 விக்கட்டுகளைக் கைப்பற்றிய 2004 ம் வருட அணியின் றமீஸ் தொடர் ஆட்ட நாயகன் விருதை பெற்றுக் கொண்டார்.

இந்த இறுதி போட்டி நிகழ்வில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம். ஜாபிர் உள்ளிட்ட சிரேஷ்ட பழைய மாணவர்கள், மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டதோடு நிந்தவூரில் கிரிக்கெட் முதுசம் ஆசிரியர் கே.எல். நூர் முஹம்மட் அவர்களுக்கு பாடசாலை சார்பாக விஷேட ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை இந்த சுற்றுத்தொடரின் மூன்றாவது அணியாக 2005 ம் ஆண்டு அணி தெரிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_5160 IMG_5250 IMG_5258 IMG_5266

Web Design by Srilanka Muslims Web Team