அள்­ளுப்­பட்டு போய்­வி­டு­வோமோ, என்ற ஆபத்தில் இருக்­கின்றோம் - ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim

அள்­ளுப்­பட்டு போய்­வி­டு­வோமோ, என்ற ஆபத்தில் இருக்­கின்றோம் – ரவூப் ஹக்கீம்

Contributors

எல்­லோரும் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்­டு­மென்று எல்­லோரும் கூறி­னாலும், குறு­கிய அர­சியல் நோக்கம் அதற்கு தடை­யாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. இந்த குறு­கிய நோக்கில் இருந்து விடுபடா விட்டால், முழு நாடுமே மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்.இவ்­வாறு மு.காவின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மரு­த­மு­னையில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்­சூ­ருக்கு நடை­பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போது தெரி­வித்தார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

முன்னாள் அமைச்சர் மன்­சூரின் ஊழ­லில்­லாத அர­சியல் வாழ்க்கை இங்கு பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது. இந்த நிலையில், இங்கு சிங்­கப்­பூரின் அர­சியல் பற்­றியும், பொரு­ளா­தாரம் பற்­றியும், இன­பா­கு­பாடு இல்­லாத அர­சியல் பற்­றியும் பேரா­சி­ரியர் நுஹ்மான் தொட்டு விட்டுப் போனார்.

சிங்­கப்பூர் ஒரு கட்சி அர­சி­யலை கொண்ட நாடு என்­ப­த­னையும் அவர் சொல்லத் தவ­ற­வில்லை. அது மட்­டு­மல்ல அங்கு பத்­தி­ரிகை சுதந்­தி­ரமும் இல்லை. பத்­த­ரி­கை­களில் அர­சி­யல்­வா­திகள் பெரி­தாக விமர்­சிக்­கப்­பட மாட்­டார்கள்

ஆனால் எங்கள் நாட்­டிலே அர­சி­யல்­வா­தி­களை விமர்­சிக்கும் சுதந்­திரம் பத்­தி­ரி­கை­களுக்கு இருக்­கின்­றது. எங்கள் நாட்டில் பத்தி­ரிகை சுதந்­திரம் வர­வேற்­கத்­தக்க வகை­யி­லா­வது இருக்­கின்­ற­தென்று ஆறு­த­டை­யலாம்.

ஆனால், அதுவும் அடக்கு முறைக்­குள்­ளாக்கப்­பட்­டுள்­ள­தென்ற குற்­றச்­சாட்­டுக்­களும் இல்­லா­ம­லில்லை. யுத்த காலத்தில் பத்­த­ரி­கை­யா­ளர்கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள் என்ற விடயம் சர்­வ­தேச ரீதி­யான விமர்­ச­னங்­க­ளுக்கு கார­ண­மாக இருந்­த­தென்­பது நாங்கள் மறக்க முடி­யாத விச­யங்­கள்தான்.

இந்த நாடு சந்­தித்த சாபக்­கே­டு­களில் ஒன்­றுதான் அர­சாங்­கங்க­ளுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைப்­பது. அத­னால்தான் அர­சியல் அஸ்­த­ம­னங்­களும் இடம்பெறு­கின்­றன. அது தனிப்­பட்­ட­வர்­களை பாதிப்­ப­தென்­பது தவிர்க்க முடி­யாத விச­ய­மாகும். இதில் நாங்­களும் அள்­ளுப்­பட்டு போய்­வி­டு­வோமோ என்ற ஆபத்தில் நாங்கள் இருக்­கின்றோம்.

1970, 1977களில் நடந்­தது இப்­போது 2010 லும் நடந்­தி­ருக்­கின்­றது. அர­சியல் யாப்­புக்­களை மாற்­று­வ­தற்கு தன்­னிச்­சை­யாக அர­சாங்­கங்கள் எத்­த­னிக்­கின்ற போது ஏற்­படும் ஆபத்­துக்கள் இருக்கின்றன. அந்த விபத்­துக்­களில் நிறை அஸ்­த­ம­னங்­களும் நடை­பெற்­றுள்­ளன.

2009ம் ஆண்டில் யுத்த வெற்­றியின் பின்னர் ஏற்­பட்­டுள்ள இந்த ஆபத்தை தவிர்ப்­ப­தற்கு நான் நண்பர் கரு­ ஜ­ய­சூ­ரி­யா­வுடன் பெரும் போராட்­டத்­தையே செய்­தவன். கடந்த பொதுத் தேர்­தலை நாங்கள் சந்­தித்த போது ஐ.தே.கவும், முஸ்லிம் காங்­கி­ரஸும் ஒன்­றாக இருந்தோம்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் தோல்வி எங்­க­ளுக்கு ஒரு பொருட்­டாக இருக்­க­வில்லை. ஆனால், எங்­க­ளுக்கு இருந்த சவால் இரண்­டா­வது தட­வை­யாக வந்­துள்ள இந்த ஜனா­தி­ப­திக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைத்­து­விடக் கூடா­தென்­ப­தாகும்.

பொதுத் தேர்­தலில் ஐ.தே.கவுடன் யானைச் சின்­னத்தை மறந்து விட்டு, தயவு செய்து அன்னச் சின்­னத்தில் வாருங்கள் என்று கேட்டோம். ஆனால், கரு­ ஜ­ய­சூ­ரிய போன்­ற­வர்கள் யானைச் சின்­னத்­தில்தான் போட்­டி­யிட வேண்­டு­மென்று விடாப்­பி­டி­யாக இருந்­தார்கள்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி கொண்­ட­வர்­க­ளுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைத்து விடும். அவ்­வாறு இல்­லாமல் மூன்றில் இரண்டிற்கு எட்­டிய தொகை கிடைத்து விட்டால் மீத­மா­ன­வர்­களை மற்றக் கட்­சி­களில் இரந்து கவர்ந்து விடு­வார்கள் என்று நாங்கள் சிந்­தித்தோம். எங்­களைப் போன்ற கட்­சி­களை துண்­டாக்கி அழித்­து­ வி­டு­வார்கள் என்று எண்­ணினோம்.

அர­சாங்­கத்தில் விரும்­பத்­த­கா­த­ ஒ­ரு­வ­ராக என்னைப் பலரும் பார்க்­கலாம். இலங்கை –- இந்­திய ஒப்­பந்தம் முஸ்­லிம்­களை பாதித்­தது. இத­னால்தான், முஸ்லிம் காங்­கி­ர­ஸி­ற்கு எழுச்சி ஏற்­பட்­டது. இந்த எழுச்­சியால் முன்னாள் அமைச்சர் மன்­சூரும் பாதிக்­கப்­பட்டார்.

ஒப்­பந்­தத்தில் பிரச்­சி­னை­யில்லை. ஒப்­பந்­தத்­திற்கு பின்­ன­ரான சூழல்தான் கார­ண­மாகும். ஒரு ஜனா­தி­பதி ஒரு ஒப்­பந்­தத்தின் மூல­மாக இர­­வோடு இர­வாக வடக்­கையும், கிழக்­கையும் இணைத்­தமை முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சியல் அஞ்ஞாத வாச நிலைக்கு போயுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவரின் இந்­நி­லைக்கு விடு­தலைப் புலி­கள் தான் கார­ண­மாகும். வடக்கு முழு­வ­திலும் தேர்தல் பகிஷ்­க­ரிப்பைச் செய்­தார்கள்.

இன்­றைய அர­சியல் சூழ்­நி­லையில் தமிழ், முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மல்ல. சிங்­கள தேசிய தலை­மை­களில் நேர்­மை­யாக சிந்­திக்­கின்ற தலை­மை­களும் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்டும். அவ­ச­ர­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அர­சியல் யாப்பு திருத்­தங்­களை ஆத­ரிக்­காக ஓர் அணி­யாக உரு­வாக வேண்டும்.

அது இல்­லாமல் இந்த நாட்­டிற்கு விமோ­ச­ன­மில்லை என்ற ஆபத்­தைத்தான் நாங்கள் எதிர் நோக்­கி­யுள்ளோம். எல்­லோரும் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்­டு­மென்று கூறி­னாலும், குறு­கிய அர­சியல் நோக்கம் அதற்கு தடை­யாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இந்த குறு­கிய நோக்கில் இருந்து விடு­ப­டா­விட்டால், முழு நாடுமே மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும். அர­சி­யல்­வா­தி­களின் சேவை­களில் குறை­களை காண முடி­யாது. ஆனால், மேலா­திக்­க­வா­தி­களின் அர­சியல் போக்கு என்­பது எங்­களை இனத்­துவ அரசியல் சிந்தனைக்குள் பலவந்தமாக தள்ளியிருக்கின்றது.

எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு எங்களை இந்த திக்கிலே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இவற்றை எல்லாம் கடந்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதென்பது இலகுவான காரியமல்ல.

அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியிலே எந்த தார்மீகத்தைப் பற்றியும் சிந்திக்காதுள்ள போக்கிற்கு எதிராக அது அரச அணியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி அனைவரும் ஒன்றுபட்டு அரணாக போராடுகின்ற கட்டத்தினை எட்டியிருக்கின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team