அழகாகத் திட்டமிட்டு கணகச்சிதமாக ஒரு சதி முஸ்லீம் காங்கிரசில் அரங்கேற்றப்பட்டுள்ளது - Sri Lanka Muslim

அழகாகத் திட்டமிட்டு கணகச்சிதமாக ஒரு சதி முஸ்லீம் காங்கிரசில் அரங்கேற்றப்பட்டுள்ளது

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம்
வை.எல்.எஸ் ஹமீடின் கிழக்கு மாகணசபையின் முதலமைச்சா பதவி முடிவுக்கு வந்த முதலமைச்சர் பற்றிய ஊடக அறிக்கை.

 

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகணசபையில் நிலவி வந்த இழுபறிகள் நேற்று தமிழ்த்தேசிய உறுப்பினர்களுடன் சுமுகமாக முடிந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அழகாகத் திட்டமிட்டு கண கச்சிதமாக ஒரு சதி ஸ்ரீ.ல.மு.காங்கிரசில் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாது.

 

முதலமைச்சரைப் பெருவதற்கு ஜக்கிய முன்னணி சுதந்திர கூட்டமைப்பை பயன்படுத்தியதும் அதன்பின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இணைத்துக் கொண்டு ஏனைய முஸ்லீம் கட்சிகளை ஓரங்கட்டுவதற்காக ஜ.ம.சு.கூட்டமைப்பையே உதறிவிட்டு இருக்கின்றார்கள். ஜ.ம.சு.கூட்டமைப்பும், இதற்கு எதிராக வாய்திறந்து பேசினால் கிழக்கு மாகாண ஆட்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கு பெறுவதை ஜனாதிபதி மைத்திரி விரும்பவில்லை. என்ற தோற்றப்பாடு ஏற்பட்டு விடும். என்பதனால் வெல்லவும் முடியாமால் உமுழவும் முடியாமால் தத்தளிக்கின்றார்கள்.

 
முஸ்லீம் காங்கிரசும் தமிழ்த்தேசிய கூட்;டமைப்பும் சேர்;ந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியைப் பகிர்ந்து கொள்வதில் கொள்கை ரீதியாக யாரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் அதுதான் நோக்கமென்றால் அதனை நேர்மையாக செய்திருக்கலாம்.

 

நடந்தது என்ன ?
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலினைத் தொடர்ந்து முஸ்லீம் காங்கிரசும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. திடிரென ஆவேச அறிக்கைகளையும், ஆக்ரோசமான பேட்டிகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்கள் திரு சுமந்திரன் ஆகியோர்கள் வெளியிட ஆரம்பித்துள்ளனர். அதன் சாரம்சம் – கிழக்கு மாகாணத்தில் 11 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே முதலமைச்சர் பதவி ஜனநாயக ரீதியாக உரித்தானது. வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்தும் முதலமைச்சர் பதவியை பெறுவது ஜனநாயகத்துக்கு விரோதம். என்பதாகும்.

 

இவ்வாறானதொரு ஜனநாயகத்தை முதல் தடவையாக தமிழ் தேசிய கூட்;டமைப்புடன் இருந்துதான் கேட்டோம். போதாக்குறைக்கு சில எழுத்தாள நண்பர்களும் வழமைபோல் அது சரியெனக் கட்டுரை எழுதினார்கள்.

 

இந் நிலைமையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒர் உடன்பபாட்டுக்கு வந்தது. அதில் முதலமைச்சரும் இன்னொமொறு அமைச்சும் முஸ்லீம் காங்கிரசுக்கும் ஏனைய பதவிகள் ஜ.ம.சு.கூட்டமைப்புக்கும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே நேரம் ஜ.ம.சு. கூட்டமைப்பு இது தொடர்பாக ஏனைய கூட்டுக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் மாகாணசபை உறுப்பிணர்களிடமிருந்து அவசர அவசரமாக, சத்தியக் கடதாசியைப் பெற்றதும் அதன் காரணமாக எமது உறுப்பிணர்கள், கையெழுத்து வைத்து-கட்சி மாறியதும் அனைவரும் அறிந்த விடயம். புpன்னர் கலந்தாலோசிக்காமல் அவசரமாக ஏன் கையெழுத்து பெற்றீர்கள் ? என ஜ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தவிடம் வினவியபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் கூறிய செய்தியே காரணம் என்று அவர் கூறினார்.

 

(அவ்விடயம் இங்கு தவிர்க்கப்படுகின்றது தேவையேற்படின் பின்னர் வெளியிடப்படும்.)
இவ்வாறு ஜ.ம.சு.கூட்டமைப்பை பயன்படுத்தி முதலமைச்சினைப் பெற்றுகொண்டு ஏனைய முஸ்லீம் கட்சிகளை ஓரங்கட்டும் தனது சதித்திட்டத்தை அரங்கேற்றுமுகமாக ஜ.ம.சு.கூட்டமைப்பின் உடன்பாடுயின்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சுப்பதவிகளை வழங்க முஸ்லீம் காங்கிரஸ் முன்வந்ததுள்ளது. அதற்கு ‘தேசிய அரசாஙகம்’ என்று ஒரு பெயரையும் சூட்டியது. மாகாணத்தில் எவ்வாறு தேசியஅரசு வர முடியும் ? சிலவேளை அகராதியை மாற்றிவிட்டார்களோ தெரியாது.

 
முதலமைச்சர் பதவி வழங்கப்பட்ட விடயம் கூட்டாச்சிக்கு இடமில்லை. என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சர் பெற்றவுடன் அதில் இணைந்து அமைச்சுப்பதவிகள், பெற்றதற்குப் பின்னால் புதைந்திருக்கும் காரணிகள் என்ன ?

 

வட கிழக்கு இணைப்பதற்கு கிழக்கு மாகாணசபை ஆதரவு தரும். என்கின்ற உடன்பாடா? அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பதவிகளுக்கு சோரம் போகிவிட்டதா?

 

இங்கு எழுப்பபட வேண்டிய கேள்விகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பதவிகளுக்காக இலட்சியத்தை கைவிட்டு விட்டார்களா? அவ்வாறு இல்லையெனில் நமது இலட்சியப்பாதையினை இன்னுமொறு அலைவுக்காக முதலமைச்சர் பதவி இல்லாதபோதிலும் முஸ்லீம் காங்கிரசின் ஆட்சியினை தக்க வைக்க ஆதரவு தர முன் வந்தார்களா ? அவ்வாறாயின் அதற்கும் பகரமாயின் முஸ்லீம் காங்கிரஸ் கொத்துள்ள வாக்குறுதி என்ன ?

 

ஏனைய முஸ்லீம் கட்சிகளின் மாகாண சபையில் ஓரங்கட்டும் கட்சிகளின் வியூகம் தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அதற்காக முஸ்லீம் சமுகம் கொடுக்கப்பபோகும் விலை என்ன ? வட கிழக்கு இணைப்புக்கு முன்மொழிவா ? அதற்கு முஸ்லீம் அலகு எனும் பொய்ப் பந்தலா ?
யாரும் யாரையும் ஓரங்கட்ட முடியாது இந்தச் சக்தி இறைவனுக்கு மாத்திரமே இருக்கின்றது.
‘சதிகார்களை மிகைத்த சதிகாரன் இறைவன் திட்டமிடுபவர்களை மிகைத்த இறைவன்’

 

வை.எல்.எஸ் ஹமீட்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Web Design by Srilanka Muslims Web Team