அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல்! - Sri Lanka Muslim

அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல்!

Contributors

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் (LDSP) கீழ், அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில், சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று  நடைபெற்றது.

இதன்போது உள்ளூர் பொருளாதார மேம்பாடு, உணவு பாதுகாப்பு, உள்ளூராட்சி சபைகளின் சேவைகளை மேம்படுத்தல் போன்ற விடயங்களை மையமாகக் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் , பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தினை தயாரிப்பதற்கான வழிகாட்டல் பயிற்சியினை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான என்.எம்.சாஹிர், திருமதி எம்.வரக்குணராகவன், ஐ.பஸ்மிலா ஆகியோர் முன்னெடுத்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team