அவுஸ்திரேலிய அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது: றோகித் சர்மா - Sri Lanka Muslim

அவுஸ்திரேலிய அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது: றோகித் சர்மா

Contributors

Rohit(7)

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் றோகித் சர்மா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவில் விளையாடிய அனுபவமுடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டி, 7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. வழக்கமான அவுஸ்திரேலிய அணிகளை விட இவ்வணி அனுபவத்தில் குறைவான அணியாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த றோகித் சர்மா, அவுஸ்திரேலிய அணி போட்டித் தன்மையான ஓர் அணி எனவும், அவ்வணியிலுள்ள அனேகமான வீரர்கள் இந்தியன் பிறீமியர் லீக் தொடரிலும், சம்பியன்ஸ் லீக் தொடரிலும் பங்குபற்றியுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய வீரர்கள் இந்திய ஆடுகள நிலைமைகளை நன்கறிவார்கள் எனக் குறிப்பிட்ட றோகித் சர்மா, அவுஸ்திரேலிய அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார். அவுஸ்திரேலிய அணி மிகவும் ஆபத்தான எனக் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய அணியில் ஷேன் வொற்சன், மிற்சல் ஜோன்சன் மாத்திரம் 100 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு அதிகமாக விளையாடியவர்களாக உள்ள போதிலும், அவுஸ்திரேலிய அணி பலமான அணியெனக் குறிப்பிட்ட அவர், அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் போட்டிகளை வென்று கொடுக்கக் கூடியவர்கள் எனக் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team