அவுஸ்திரேலிய விசா பெறுவதற்காக வாலிபர் நடத்திய நாடகம் அம்பலம். - Sri Lanka Muslim

அவுஸ்திரேலிய விசா பெறுவதற்காக வாலிபர் நடத்திய நாடகம் அம்பலம்.

Contributors

-ஸாதிக் ஷிஹான்-

ஆயுத முனையில் கடத் தப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழ் இளைஞன் முல்லைத்தீவின் முள்ளியவளை பிரதே சத்திலுள்ள தனது நண்பன் ஒருவனின் வீட் டில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளார்.

யாழ்ப்பாணம், பருத்தித் துறை பிரதேசத்தைச் சேர்ந்த சூரியகுமார் தமிழ் அமுதன் என்ற 22 வயது இளைஞனே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த இளைஞன் பருத்தித்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய தனது மகன் நான்கு பேர் கொண்ட குழுவினரால் ஆயுதமுனையில் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டதாக கடந்த 26 ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நான்கு பேர் கொண்ட குழு ஆயுத முனையில் தன்னை கடத்தியுள்ளனர் இவர்களில் மூவர் சிங்களத்தில் கதைக்கின்றனர். மற்றையவர் முஸ்லிம் ஒருவர். இவர்கள் இராணுவமாக இருக்கலாம் என்று தனது மகன் தனது கையடக்கத் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி (எஸ். எம். எஸ்.) ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என்றும் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித் துள்ளார்.

இந்தச் சம்பவத்தை வடக்கில் இராணுவமே செய்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட அதேசமயம், அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் குறித்த இளைஞன் முல்லைத்தீவு முள்ளியாவளை பிரதேசத்தில் தனது நண்பனின் வீட்டில் உள்ளார் என்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அந்தப் பிரதேசத்திற்கு சென்று இளைஞனை மடக்கிப் பிடித்துள் ளனர்.

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மேற்படி இளைஞனிடம் பொலிஸார் விசாரணை செய்தபோது ‘தான் பஸ் வண்டியில் ஏறிவந்ததாகவும் தன்னை எவரும் கடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆயுத முனையில் நால்வர் கடத்தியதாகவும், இதனை இராணுவத்தினரே செய்திருக்கலாம் என்று கூறியமைக்கான காரணம் என்னவென்றும் இதன் போது பொலிஸார் விசாரித்துள்ளனர்.

இது தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ள இளைஞர், ‘எனது அக்கா அவஸ்திரேலியாவில் உள்ளார். நானும் அவரிடம் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்குச் செல்ல புகலிடம் கோருவதாக இருந்தால் இவ்வாறு கூறினால்தான் கிடைக்கும் என்பதற்காகவே அவ்வாறு கூறியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நோக்குடன் சிலரால் மேற்கொள்ளப்படும் இது போன்ற நடவடிக்கைகள் அரசுக்கும் படை வீரர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team