அஷ்ரஃப் சிஹாப்தீனின் "யாரும் மற்றொருவர்போல் இல்லை'' கவிதை வெளியீட்டு விழா இன்று - Sri Lanka Muslim

அஷ்ரஃப் சிஹாப்தீனின் “யாரும் மற்றொருவர்போல் இல்லை” கவிதை வெளியீட்டு விழா இன்று

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பன்னூலாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர்போல் இல்லை’ என்ற கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நாளை 22.09.2017 – வெள்ளிக் கிழமையன்று பி.ப. 4.30க்கு கொழும்பு – 10 – அல்ஹிதாயா மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் மாண்புமிகு ரிஷாத் பதியுதீன் அவர்களும் சிறப்பதிதியாக கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் மாண்புமிகு எம்.எஸ்எஸ். அமீர் அலி அவர்களும் கலந்து கொள்வார்கள்.

நூலை முன்வைத்து கவிஞர் – எழுத்தாளர் அமல்ராஜ் பிரான்ஸிஸ் கவிஞரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிசுவுரையாளருமான எப்.எச்.ஏ.ஷிப்லி ஆகியோர் உரைநிகழ்த்தவுள்ளனர். நூலின் முதற்பிரதியை புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்வார்.

யாரும் மற்றொருவர் போல் இல்லை என்ற இந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியில் 30 நாடுகளைச் சேர்ந்த 49 கவிஞர்களின் 50 கவிதைகள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

bo bo.jpeg2

Web Design by Srilanka Muslims Web Team