அஷ்ரபின் ஆளுமையின் அனுபவம், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு வலுச்சேர்க்குமா..? - Sri Lanka Muslim

அஷ்ரபின் ஆளுமையின் அனுபவம், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு வலுச்சேர்க்குமா..?

Contributors

(எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நவீன அரசியல் யுக வரலாற்றை அஷ்ரபின் மரணத்துக்கு  முற்பட்ட அரசியல் யுகம் என்றும் பிற்பட்ட அரசியல் யுகம் என்றும் இரண்டாகப் பிரித்து நோக்குவது பொறுத்தமாகும்.

மு.கா.வின் தலைவர் அஷ்ரபின் மறைவுக்கு முற்பட்ட கிழக்கின் அரசியல் யுக வரலாறு பெரும்பான்மை இன அரசியல் கட்சிகளின் செல்வாக்கு நிறைந்ததாக இருந்தது. அந்தக் கட்சிகளின் அரசாட்சியில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர பலர் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்காது சலுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனால் கிடைக்கப்பெற்ற ஒரிரு வரப்பிரசாதங்களை தாங்களும் பெற்றுக்கொண்டு மக்களுக்கும் வழங்கி, அதனால் அரசியல் அதிகாரங்களையும் தமது செல்வாக்கையும்   தக்கவைத்துக்கொண்டனர்.

இவ்வாறு தொடர்ந்த கிழக்கின் முஸ்லிம் அரசியலில் ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டது. அதுதான,; 1982ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக உதயமானதாகும். கிழக்கின் காத்தான்குடியில் உதயமாகி பரிணாம வளர்ச்சியடைந்த இக்கட்சி, 1987ஆம் ஆண்டில் நடைபெற்ற வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில் 17 ஆசனங்களைப் பெற்று இணைந்த வடகிழக்கின் ஆட்சியில் எதிர்கட்சியாக அமர்ந்தது.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது, அத்தேர்தலில் போட்டியிட்ட மு.கா. 4 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.  குர்ஆணையும் ஹதிசையும் கூறி உரிமைக்குரலின் பால் அழைப்பு விடுத்த மு.கா. வின் தலைமை,  சிதறுண்டு கிடந்த கிழக்கு,வடக்கு முஸ்லிம் மக்களில் கனிசமான பகுதியினரை தனது தலைமைத்துவ ஆளுமையினால் ஒரு குடையின் கீழ்  ஒன்றிணைத்தது மாத்திரமின்றி,  தெற்கிலும் பல தியாகங்களினால் அக்கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டது.

1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த பெரும்பான்மையினக் கட்சிகளின் ஆட்சியினைத் தீர்மானித்த ஒரு சிறுபான்மையினக் கட்சி மு.கா. என்பதை அஷ்ரபின் ஆளுமை நிறைந்த அரசியல் வழிகாட்டல் வரலாற்றுப்பாடமாகவும் அமைந்தது.

இந்நாட்டின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸை வெளியுலகிற்கு வெளிப்படுத்திய அஷ்ரபின் ஆளுமை கட்சிக்குள்; தலைமைத்துவம் எடுக்கும் தீர்மானத்தினை  கட்சியில் அங்கம் வகிக்கும் அனைவரும் கட்டுக்கோப்புடன் பின்பற்றவும் செய்தது.

பிரதேசவாதத்திற்கு சாவு மணியடித்த அஷ்ரப், முஸ்லிம்களின் உணர்வும் ஒற்றுமையும்தான் மு.கா.வின் முதலீடு என்பதையும் அதன் பலமே வெற்றி என்பதையும் அவரின் வாழ்நாளில் சந்தித்த  தேர்தல்களில் நிலைநிறுத்தினார். அரசியல் பலம்பொருந்திய கட்சியாக மு.கா.வை உருவாக்கிய அஷ்ரப், 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை நாட்டின் அரசாங்கத்தின் ‘ரிமோட் கொண்ரோல்’ ஆகாவும் விளங்கினார் என்பது  எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாகும்.

அதுமாத்திரமின்றி, கட்சியின் ஒற்றுமைக்கும், கட்டுக்கோப்புக்கும், தலைமைத்துவத்துக்கும் குந்தகம் விளைவித்தவர்களை கட்சியிலிருந்து அஷ்ரப் தூக்கி வீசினார். அவ்வாறு வீசப்பட்டவர்கள் இன்றுவரை  அரசியலில் பிரகாசிக்க முடியாதவர்களாகவே உள்ளதை வெளிப்படையாகக் காணமுடிகிறது.

ஆனால், தற்போதை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பலவீனமடைந்துள்ளமையை பல சம்பவங்கள் புடம் போற்றுக்காட்டுகின்றன. இதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

கல்முனை மா நகர சபை மேயர் பதவி வியடத்தால்,  கல்முனையின் முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளி;ப்பான நிலைக்கு தற்போதைய மு.கா.வின் தலைமை எடுக்கும் தீர்மானம்   அத்தலைமையினது ஆளுமையின் பலத்தையும்; பலவீனத்தையும் மக்கள் அறிந்துகொள்வதற்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் என்றே கூற வேண்டும்.

தற்போதைய கல்முனை மாநகர சபை பிரதேச சபையாக இருந்த 1999 ஆம் ஆண்டு காலப்பகுதயில,;  அதிகூடிய வாக்குகளைப் பெற்று அச்சபையின் தலைவராக இருந்த பொறியியலாளர் மருதமுனை ஹமீட்டை நியாயங்களுடன் பதவி துறக்கச் செய்த அஷ்ரப், அப்பதவியினை பள்ளிக்காக்கா என்பவருக்கு வழங்கினார். அப்போது அந்த ஆளுமையுள்ள தலைமை எடுத்த முடிவுக்கெதிராக, தற்போது கல்முனை மாநகர சபை மேயர் பதவி துறப்பு விடயத்தில் ஏற்பட்டுள்ள சலசலப்புப் போன்று ஏற்படவில்லை.

தலைமைக்கெதிரான அறிக்கைகளும் கோஷங்களும் வெளிவரவில்லை. கூட்டங்கள் கூட்டி மக்களிடையே பிரதேசவாதத்தை வளர்க்கும் கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை. தலைமையின் ஆணையை ஏற்றுக்கொண்ட கொள்கைப் பற்றுள்ளவர்களாக கணவான் அரசியல் சித்தாந்தம் தெரிந்தவர்களாக செயற்பட்டமை இன்னும் மக்களிடையே மறக்கப்படவில்லை.

பொறியியலாளர் ஹமீட் மருதமுனைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும,; அவர் மருதமுனை மக்களை அஷ்ரப் எனும் ஆளுமைக்கு எதிராகவோ அல்லது தலைவர் அஷ்ரபினால் பிரதேச சபைத் தலைவராக நியமிக்கப்பட்ட பள்ளிக்காக்கா என்பவர் பிறந்த மண்ணை வசைபாடவோ யாரையும் ஏவிவிடவில்லை என்பதும் கல்முனை அரசியலின் வரலாற்று அனுபவமாகும்.

தலைவர் அஷ்ரபின் அன்றைய தீர்மானமும் அதற்கெதிராக வெளிக்கிழம்பாத  கருத்துக்கள், பிரதேசவாதக் கோஷங்கள் என்பன அத்தலைமையின் தலைமைத்துவ ஆளுமைக்குக் கிடைத்த அங்கீராமாகவே கருத வேண்டும்.

பிரதேசவாதக் கருத்துக்களுக்கும் கோஷங்களுக்கும் சாவுமணியடித்து எல்லோருக்கும,; எல்லாக் கிராமங்களுக்கும் அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் என்பது ஒரு ஊருக்கு அல்லது ஒருத்தருக்கு தொடர்ச்சியானதாக இருக்கக் கூடாது. அந்த அதிகாரத்தின் பயனை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற நிiலையிலிருந்துகொண்டு, கட்சியை வழி நடத்தி கட்சியையும், தலைமைத்துவத்தையும், நம்பிய மக்களையும் ஆளுமையுடன் ஒன்று திரட்டிய நிலையில்தான்; 2000ஆம் ஆண்டு இறைவனின் நாட்டப்படி அகால மரணத்தை அடைந்தார் தலைவர் அஷ்ரப்.

2000.09.16ஆம் திகதியே அஷ்ரபின் மரணத்தினத்தின் பின்னரான அரசியல் யுகம் கிழக்கில் உருவாhன திகதியாகும். மு.கா.வின் வீழ்ச்சியும் உறுப்பினர்களின் பிரிவினையும் அத்திகதியிலிருந்து ஆரம்பித்ததை நாம் அறிவோம்.

இவ்வாறு உறுப்பினர்களின் பிரிவினையின் விளைவானது மு.கா. வின் வீழ்ச்சிக்கு வித்திட்டதுடன்; அதன் அரசியல் வாக்கு வங்கியின் சராசரியையும் வீழ்ச்சி காணச் செய்தது மாத்திரமின்றி, முஸ்லிம் அரசியலில் பல கட்சிகளின் தோற்றத்துக்கும் காரணமாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

உணர்வினாலும் ஒற்றுமையினாலும் அரசியல் அனுபவம் கொண்டவர்களினாலும்  தேர்தலில் களம் இறங்கி  வெற்றிகள் பலவற்றைக்; கண்ட மு,கா.வின் தேர்தல் கலாசாரம், அனுபவமற்றவர்களை, கட்சியின் கொள்கையும் அது வளர்ந்த வரலாறும்  தெரியாதவர்களை, கட்சியின் வளர்ச்சிக்காக தியாகம் செய்யாதவர்;களை பணத்துக்காக வேட்பாளர்களாக்கி பிரதிநிதித்துவம் கொடுக்கும் மோசமான கலாசாரத்துக்கு துணைபோனமையே பிரதேசவாதத்திற்கான தோற்றுவாயாகவும் அக்கட்சியின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாகவும் அமைந்ததாகக் கட்சியின் மூத்த போராளிகள் குறிப்பிடுகின்றனர்.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னான முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் கலாசார மாற்றம்   மூத்த அரசியல் அனுபவிக்க, மறைந்த தலைவரின் பாசறையில் வளர்ந்த கட்சிப் போராளிகளிடத்தே மனக்கசப்பையும் கட்சியில் வெறுப்பiயும் ஏற்படுத்தியது வெளிப்படை.

இவ்வாறானதொரு நிலைக்கு வந்துள்ள மு,கா.வின் அரசியல் பயணத்தில்  தற்போது கல்முனை மாநகர சபை மேயர் பதவி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, கட்சியின் தீர்மானம் தொடர்பிலும், கட்சியின் அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் அஷ்ரப் எனும் ஆளுமை மேற்கொண்ட தீர்மானங்களின் அனுபவம் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின்; ஆளுமைக்கு வலுச்சேர்க்குமா என்ற கேள்வி கல்முனைப் பிரதேச மக்கள் மனங்களில் இன்று விடைக்காகத் தொக்கு நிற்கிறது.

அரசியல் எனும் சதுரங்கத்துக்குள் மறைந்துகொண்டுள்ள பிரதேசவாதம் கல்முனைப் பிரதேசத்தில் பரிணாமம் பெறுவதும் பரிநிர்வாணமடைவதும்  தற்போதைய மு.கா.வின் தலைமையினது ஆளுமையினிலே தங்கியுள்ளது.

கல்முனைப் பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் வகித்தவர்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அல்லது பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சமூக சிந்தனை பிரதேசவாதத்தை  நோக்கி நகர்ந்தாலும், அது அவர்களின் அல்லது அக்கிராமங்களின் சமூகப் பார்வையில் சரியாகத் தெரிந்தாலும் அது உண்மையில் தவறானதே.

ஒரு வரலாறு பிழையாக எழுதப்பட்டது என்பதற்காக இன்னுமொரு சரியான வரலாற்றை பிழையாக எழுத எத்தனிப்பது இப்பிரதேசத்தில் தொடர்ந்தும் வரலாறுகளை பிழையாக எழுவதற்கு வழிவகுக்கும் என்பதை உரியவர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும.; அது பிரதேசவாதத்திற்கு அப்பால் கட்சியையும், மனிதத்துவத்தையும் சகோரத்துவத்தையும் நீதியான அதிகாரப் பகிர்வையும் நேசிப்பவர்களின் அவாவாகவுமுள்ளது.

யாருக்கு பதவி வழங்கப்பட்டாலும் யார் மேயர் ஆசனத்தில் அமர்ந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் கட்சியின் தீர்மானம் சரியாக இருக்க வேண்டும் என்பதே கட்சிப் போராளிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.  வாக்குறுதி அளிக்கும்போது மக்களைக் கூட்டிக் கருத்துக் கேற்காதவர்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள் என கட்சித் தலைமை கூறுகின்றபோது மாத்திரம் ஊரைக் கூட்டி மக்கள் கருத்துக்கேற்பதில் என்ன நியாயம் இருக்கிறது எனவும் கட்சியின் மூத்த போராளிகள் கேட்கின்றனர்.

ஒரு சாராரின் அழுத்தங்களுக்கும் பிரதேசவாதத்திற்கும் மு.கா. துணைபோகுமாயின் அதன் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கான பாதை அதிவேகப்பாதையாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை. இறக்காமம் பிரதேச சபைக்கு ஒரு நியாயம் கல்முனை மா நகர சபைக்கு ஒரு நியாயம் என்ற தீர்மானத்திற்கு மு.கா.வின் தலைமை வருமா என்ற கேள்வியும் முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ளது.

கட்சி என்பதும் கட்சியின் தலைமைத்துவம் என்பதும் சேற்றில்நாட்டிய கம்பாக இருந்தால் கட்சியை வழிநடத்தவோ தீர்மானங்களை நிறைவேற்வோ முடியாது போய்விடும் என்று கூறும் கட்சியின் மூத்த போராளிகள் அஷ்ரபின் ஆளுமையின் அனுபவத்தினைப் பற்றிக்கொண்டதாக நம்பப்படும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் ஆளுமையினூடாக சரியான தீர்மானம் கல்முனை மாநகர மேயர் விடயத்தில் எடுக்கப்படும் என்று நம்புகின்றனர். அந்த நம்பிக்கையோடும்  எதிர்பார்ப்போடும்; காத்திருக்கிறது கல்முனை மா நகரம்.

Web Design by Srilanka Muslims Web Team