அஸ்மாஉல் ஹுஸ்னா நூல் வெளியீடு - Sri Lanka Muslim
Contributors

(அஷ்ரப் ஏ சமத்)

 

அல்ஹாஜ் எம்.பி.எம். மாஹிர் எழுதிய “அருள்மனக்கும் அஸ்மாஉல் ஹூஸ்னா”, “நற்சிந்தனை,” “Why Islam” ஆகிய முன்று இஸ்லாமிய நூல்களின் வெளியீட்டு வைபவம் சனிக்கிழமை (23.11.2013) பிற்பகல் வெள்ளவத்தையில் உள்ள மெரைன் டிரைவ் ஹோட்டலில் நடைபெற்றது.

இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், ஆசிக் தங்கள் றிபாய் மௌலானா, ஜாமிஆ நளீமியா கலாநிதி சுக்ரி, மௌலவி எம்.எஸ்.அப்துல்லா, கவிமனி நஜிமுல் ஹூசைன் மற்றும் ஈரானிய தூதுவர் உரையாற்றினார்கள்.

அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, பசீர்சேகுதாவுத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

book2

 

book3

 

book4

Web Design by Srilanka Muslims Web Team