ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்க பெப் 10 வரை அவகாசம்! - Sri Lanka Muslim

ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்க பெப் 10 வரை அவகாசம்!

Contributors

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அது தொடர்பான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்துக்குச் சென்று மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team