ஆசிரியைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு - கல்வியமைச்சு அதிரடி! - Sri Lanka Muslim

ஆசிரியைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு – கல்வியமைச்சு அதிரடி!

Contributors

ஆசிரியைகள் புடவையை தவிர வேறு ஆடைகளை அணிந்து பாடசாலை கடமைக்கு செல்ல முடியாது என்று அறிவுறுத்தும் சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு இன்று (23) வெளியிடும் என கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளின் ஆசிரியைகள் புடவைக்கு பதிலாக வேறு உடைகளில் கடமைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியதை கவனத்தில் கொண்டு அந்த சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.

ஆசிரியைகள் பாடசாலைகளுக்கு கடமைக்கு செல்லும் போது புடவை அணிந்திருக்க வேண்டும் என்று கல்வியமைச்சு கொள்கை ரீதியாக முடிவை எடுத்துள்ளது. அந்த முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை எனவும் நிஹால் ரணசிங்க கூறியுள்ளார்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிப்புரியும் பெண்கள் தமக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து கடமைக்கு வர முடியும் என வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்து ஆசிரியைகளுக்கும் அல்ல, விரும்பு ஆசிரியைகள் தாம் விரும்பிய ஆடையில் பாடசாலைக்கு வர இடமளிக்கப்பட வேண்டும் என எமது சங்கம் கோரிக்கை விடுத்தது.

ஆண்கள் சிலர் இணைந்து பெண்களின் ஆடைகள் குறித்து முடிவை எடுப்பது கேலிக்குரிய விடயம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team