ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்திரேலிய படை முற்றாக வெளியேற்றம் - அவுஸ்ரேலிய அரசாங்கம் - Sri Lanka Muslim

ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்திரேலிய படை முற்றாக வெளியேற்றம் – அவுஸ்ரேலிய அரசாங்கம்

Contributors

ஆப்கானிஸ்தானின் உள்ள தமது இறுதி துருப்பினர் தொகுதியையும்  அவுஸ்ரேலிய அரசாங்கம் நேற்று மீள அழைத்துள்ளது.

2005ஆம் ஆண்டில் இருத்து அவுஸ்ரேலிய இராணுவத்தினர், ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுப்பட்டனர்.

இதன்போது 40 அவுஸ்ரேலிய துருப்பினர் பலியானதுடன், 285 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவுஸ்ரேலிய பிரதமர் டோனி அபோர்ட், தமது தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய உறுதி மொழிகளில் ஒன்றாக இந்த படையினர் மீளழைப்பு இடம்பெற்றுள்ளது.

டோனி அபோர்ட் தமது தேர்தல் பிரசாரத்தின் போது, தாம் பிரதமராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள அவுஸ்ரேலிய படைகள் முற்றாக மீளழைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையிலேயே இந்த மீளழைப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team