ஆரம்பம், ஜில்லா தயாரிப்பாளர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு! - Sri Lanka Muslim

ஆரம்பம், ஜில்லா தயாரிப்பாளர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு!

Contributors

ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், நடிகர் சந்தானம், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் நடித்துள்ள ஆரம்படம் படம் இன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறதாம்.

சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team