ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா வரலாற்று வெற்றி - சவூதியில் இன்று பொது விடுமுறை! - Sri Lanka Muslim

ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா வரலாற்று வெற்றி – சவூதியில் இன்று பொது விடுமுறை!

Contributors

FIFA உலகக்கிண்ண தொடரில் இன்று ஆர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் சவூதி அரேபியாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் வகையில், இன்று நவம்பர் 23ஆம் திகதி சவூதி அரேபியாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று (22) நடந்த போட்டியில், சவூதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது.

உலகக்கிண்ண வெற்றிக்குப் பிறகு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண காற்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு எதிராக கேமரூனின் அபாரமான ஆட்டம் – கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக அடிக்கடி குறிப்பிடப்படுவதோடு, கெமரூனில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team