ஆற்றில் படகு கவிழ்ந்து 160 பேரைக் காணவில்லை! - மாலியில் சம்பவம். - Sri Lanka Muslim

ஆற்றில் படகு கவிழ்ந்து 160 பேரைக் காணவில்லை! – மாலியில் சம்பவம்.

Contributors

மாலியின் மத்திய பகுதியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்தில் சிக்கி 30 பேர் பலியானார்கள்.மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்புக்டு நகரை நோக்கி நைஜர் ஆற்றில் சென்ற படகு திடீரென்று நீரில் மூழ்கியது. படகில் பயணம் செய்த பலருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி தத்தளித்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 210 பேரை உயிருடன் மீட்டனர். மிதந்து வந்த30 சடலங்களையும் கைப்பற்றினர். காணாமல் போன மேலும் 160 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team