இங்கிலாந்தில் கம்ப்யூட்டரை அசால்ட்டாக இயக்கும் ஏழு மாத அதிசய குழந்தை - Sri Lanka Muslim

இங்கிலாந்தில் கம்ப்யூட்டரை அசால்ட்டாக இயக்கும் ஏழு மாத அதிசய குழந்தை

Contributors

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் உள்ள ஒரு குழந்தை பிறந்து ஏழு மாதமே ஆனநிலையில் லேப்டாப் கம்ப்யூட்டர், டிவி முதலியவற்றை தானே இயக்கி, பெற்றோரையும், மற்றவர்களையும் அதிசயிக்க வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பர்மிங்காம் பகுதியில் வசிக்கும் ஜோனதன் என்ற ஏழு மாத குழந்தை 2 1/2 கிலோ எடையில் பிறந்தான். பின்னர் உடலில் மட்டுமின்றி அறிவுத்திறனிலும் அபார வளர்ச்சியடைந்தான்.

அவனுடைய வளர்ச்சியை பார்த்து பெற்றோர்கள் அதிசயித்தனர். ஏழு மாதங்களில் எழுந்து நின்று நடக்கத்தொடங்கியதோடு, மம்மி, டாடி என்று பேசும் அளவுக்கு திறமை பெற்றுள்ளான்.

மேலும் தனது தாயாரின் லேப்டாப்பை இயக்கும் அளவுக்கு அவனுடைய அறிவுத்திறன் வளர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி டிவியை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆன் செய்து தனக்கு பிடித்தமான கார்ட்டூன் சேனல்களை அவனே மாற்றி மாற்றி பார்க்கிறான்.

இந்த வயதிலேயே இசையில் நாட்டம் உள்ளவனாக உள்ளான். டிவியில் அவனுக்கு பிடித்த பாடல் ஒலிக்கும்போது எழுந்து நடனமாடி எல்லோரையும் அதிசயிக்க வைக்கிறான்.

ஜோனாதனின் முதல் பிறந்தநாளில் அவனுக்காகவே பிரத்யேகமாக செய்த மினி பியானோ ஒன்றை பரிசளிக்க அவனுடைய தந்தை முடிவு செய்துள்ளார். இதற்காகவே ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்துள்ளார்.

இந்த குழந்தையின் பெற்றொர்கள் Heather Thorpe, மற்றும் Chelmsley Wood அவர்கள் நமது செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த வயதிலேயே எங்கள் குழந்தையின் அற்புத வளர்ச்சி எங்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

அவனுக்கு தேவையானதை பூர்த்தி செய்து அவனை உலகின் மிகச்சிறந்த ஒரு பிரஜையாக மாற்றுவதே இனி எங்களின் ஒரே கடமை” என்று கூறினர்.

Web Design by Srilanka Muslims Web Team