இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில் பயணம் - Sri Lanka Muslim

இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில் பயணம்

Contributors
author image

Editorial Team

இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில் பயணம் மேற்கொண்டனர்.

ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத், அவரது மகனும் இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகமது இருவரும் இணைந்து லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுரங்க ரெயிலில் பயணம் மேற்கொண்டனர்.

கொளுத்தும் வெயில் கூட்ட நெரிசல் எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுடன் இணைந்து இருவரும் பயணம் மேற்கொண்டது சமூக வலைப்பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது அவ்வப்போது புகைப்படமெடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டிருந்தார். இந்த ரெயில் பயணத்தின் சிறப்பு என்னவெனில் இருவருமே அரேபிய உடையில் இல்லாமல் சாதாரண உடையில் பொதுமக்களுடன் இணைந்து பயணம் மேற்கொண்டதுதான்.

ஷேக் முகமது பின் ரஷீத்தின் சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என கூறப்படுகிறது.

பாரம்பரிய அரபு நாட்டு உடையுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதால், அரேபிய சுற்றுலாப்பயணிகளை அந்தந்த நாட்டுக்கேற்ற உடைகளை பயன்படுத்த ஐக்கிய அமீரகம் கேட்டு கொண்டு உள்ளது. (tw)

u

Web Design by Srilanka Muslims Web Team