இது கத்தார் ஏர்வேஸ்சின் விதிமுறைகள் - Sri Lanka Muslim
Contributors
author image

World News Editorial Team

உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூறியிருப்பதாவது, திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது.

 

வேலையில் சேர்ந்த பின் 5 வருடங்களுக்கு தனி நபராகவே இருக்கவேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் நிறுவனத்தின் அனுமதியை பெறவேண்டும்.

 

கர்ப்பம் அடைவது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும், அப்படி மீறினால் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்பன போன்ற விதிமுறைகள் உள்ளன.

 

பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் முதற்கட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியாகி 18 மாதங்கள் ஆன பின்பும் பெண்களுக்கு எதிரான தனது விதிமுறையை கத்தார் ஏர்வேஸ் மாற்றிக்கொள்ளவில்லை.

 

எனவே அந்நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பார்சிலோனா கால்பந்து சங்கத்தை சம்மேளம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எனினும் இக்குற்றச்சாட்டை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

 

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ரோசன் டிமிட்ரோவ் கூறுகையில், பணிப்பெண்கள் தனியாக இருக்கவேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை.

 

மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் பல பணிப்பெண்கள் திருமணமானவர்கள் என்றும் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் போன்ற காரணங்களுக்காகவே கர்ப்பம் அடைந்தது குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team