இத்தாலியிலிருந்து இலங்கைக்கு ஹெலிகொப்டர்கள்! - Sri Lanka Muslim

இத்தாலியிலிருந்து இலங்கைக்கு ஹெலிகொப்டர்கள்!

Contributors

மனித கடத்தலுக்கு எதிராக இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்குவதற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மனேலா விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார நிகழ்ச்சிகளின் பரிமாற்றம், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் இக்கட்டான நேரத்தில் இத்தாலியினால் இலங்கைக்கு வழங்கக்கூடிய ஆதரவு குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team