இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா? - Sri Lanka Muslim
Contributors

இந்தியாவின் அடுத்த பிரதமராக, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பதவி ஏற்றால் மாத்திரமே, இலங்கைக்கு சரியான பதில் வழங்க முடியும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் அந்த கட்சியின் செயற்குழு நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவை தமிழர்கள் ஆளும் காலம் வந்திருக்கிறது.

இந்தியாவின் பிரதமர் பதவியில், உத்தர்பிரதேஸ், பஞ்சாப், குஜராத், ஆந்திரபிரதேஸ் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.

எனினும் தமிழ் நாட்டை சேர்ந்த யாரும் இந்திய பிரதமராக இருந்ததில்லை.

இந்த நிலையில் அடுத்து பிரதமருக்கான வாய்ப்பு தமிழ் நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும் என்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஜெயராமினால் மாத்திரமே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை பலம் வாய்ந்த நாடாக மாற்ற முடியும்.

அத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கும் விடயத்தில், இந்தியாவை மதிக்காத இலங்கைக்கு, ஜெயலலிதாவினாலேயே சரியான பதிலை வழங்க முடியம் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(sf)

Web Design by Srilanka Muslims Web Team