இந்தியாவிலிருந்து கடன் பெறும் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எந்த நிபந்தனைகளும் இல்லை- டலஸ் அழகப்பெரும..! - Sri Lanka Muslim

இந்தியாவிலிருந்து கடன் பெறும் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எந்த நிபந்தனைகளும் இல்லை- டலஸ் அழகப்பெரும..!

Contributors

இந்தியாவிலிருந்து கடன் பெறும் திட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எந்த நிபந்தனைகளும் இல்லை என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களுக்கு நாட்டின் எரிபொருள் தேவைகளுக்காக இந்தி யாவிலிருந்து கடன் பெறும் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எந்த நிபந்தனைகளும் இருக்காது என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவி லிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த விடயத்துக்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஒரு முன்நிபந்த னையாக வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் கோரியுள்ளது.

நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் அடுத்த ஜனவரி வரை மட்டுமே போது மானதாக உள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித் துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team