
இந்தியாவில் மகா சிவராத்திரி திருவிழாவில் 60 பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.
இந்தியாவில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பிரசாதம் சாப்பிட்ட 60 பக்தர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.
ராஜஸ்தானின் துங்கார்பூர் மாவட்டத்தில் ஆஸ்பூர் கிராமத்தில் மகாசிவராத்திரி திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவற்றை சாப்பிட்ட பக்தர்களில் 60 – 70 பேருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ஆஸ்பூர் கிராமத்தின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளதாவது, இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை உயர கூடும் என தெரிகிறது.
பல்வேறு வைத்தியசாலைகளில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து நோயாளிகளின் மாதிரிகளை சேகரித்து கொண்டு சென்றனர். உணவு நஞ்சாக மாறியிருக்க கூடும் என்பது போல் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.