இந்தியாவில் முஸ்லிம்களின் பரிதாபம்..! - Sri Lanka Muslim
Contributors

இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரசுக்கும், மோடியின் பா.ஜ.கவுக்கு வித்தியாசம் இல்லை.பா.ஜ.கவில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ  கூட இல்லாதது அக்கட்சியின் முஸ்லிம் விரோத போக்கிற்கு சிறந்த உதாரணமாகும். ஆனால், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்று நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும் நிலை மிக மோசமாக உள்ளது.

இந்தியாவில் 28 மாநிலங்களில் 609 அமைச்சர்கள் உள்ளனர். இதில் மொத்தம் 57 பேர் முஸ்லிம்கள். வெறும் 9.35 சதவீதம் மட்டுமே.2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.34 சதவீதம் ஆகும். 57 அமைச்சர்களில் 18 பேர் ஜம்மு-கஷ்மீர் அமைச்சர்கள் ஆவர்.பா.ஜ.க ஆளும் குஜராத்தில்(9.06 சதவீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர்), சத்தீஷ்கர்(1.97சதவீதம் முஸ்லிம்கள்), கோவா(6.84 சதவீதம் முஸ்லிம்கள்), மத்திய பிரதேசம்(6.37 சதவீதம் முஸ்லிம்கள்) இங்கெல்லாம் பா.ஜ.கவுக்கு ஒருமுஸ்லிம் எம்.எல்.ஏ கூட இல்லை. பஞ்சாபை ஆளும் பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்திற்கு மலேர்கோட்லா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ உள்ளார். காரணம் அத்தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள்.

காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்டில் 11.92 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். ஆனால், முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த எந்த பிரதிநிதியும்அமைச்சரவையில் இடம்பெறவில்லை. முஸ்லிம் மக்கள் தொகை 10 சதவீதம் கொண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஆந்திரபிரதேச மாநிலத்தில் 37 காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் ஆவார்.

காங்கிரஸ் ஆளும்ஹிமாச்சல் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. 5.78 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட காங்கிரஸ் ஆளும் ஹரியானா மாநிலத்தில் ஒரேயொரு முஸ்லிம் அமைச்சர் உள்ளார். ஜம்மு-கஷ்மீரை அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாமில்(30.90 சதவீத முஸ்லிம்கள்) காங்கிரஸ் கட்சி 3 முஸ்லிம்களை மட்டுமே அமைச்சரவையில் இடம்பெறச் செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் தான் அதிக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.18.55 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பியில் 51 அமைச்சர்களில் 10 பேர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. 24.6 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி புரிகிறது .இங்கு 20 அமைச்சர்களில் 5 பேர் முஸ்லிம்கள் ஆவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்குவங்காளத்தில் 25 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். அங்கு 44 அமைச்சர்களில் ஐந்து பேர் மட்டுமே முஸ்லிம்கள்ஆவர்.பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் 2 முஸ்லிம்கள் உள்ளனர். கர்நாடகா காங்கிரஸ் அமைச்சரவையில் 2முஸ்லிம்கள் உள்ளனர். thoo

Web Design by Srilanka Muslims Web Team